திருவேங்கடத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டத்திற்கு கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி பேசியபோது எடுத்த படம்.
பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி பேசியபோது எடுத்த படம்.
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் வி.பி.மூர்த்தி துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி மதுரை மண்டல துணைச் செயலாளர் சிவானந்த், பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா பாண்டியன் தொகுப்புரையாற்றினார். மகளிர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, கலை இலக்கியப் பிரிவு துணைச் செயலாளர் நாஞ்சில் அன்பழகன் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள். கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், வாசுதேவன், செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், நகர பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com