திண்டுக்கல் அருகே புகையிலை விற்ற வியாபாரி கைது

திண்டுக்கல் அருகே புகையிலை விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
புகையிலைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டவரை படத்தில் காணலாம்.
புகையிலைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டவரை படத்தில் காணலாம்.
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார், ஏட்டுகள் கணேசன், கிருபா ஆகியோர் கோணப்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாஸ்கரன் (வயது 60) என்பவர் தனது மளிகைக் கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தடைசெய்ய

X

Maalai Malar
www.maalaimalar.com