மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்குபோட்டு தற்கொலை

தருமபுரி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் விசாரணை
மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

தருமபுரி மாவட்டம், கே.நடுஅள்ளி அருகே உள்ள மாரியம்மன் கோவில் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). சற்று மனநலம் பாதிக்கப் பட்டவரான இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை கண்ட உறவி–னர்கள் உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற னர். அப்போது அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com