தமிழர் விடுதலை களம் கட்சி உறுப்பினர் சேர்க்கை

கட்சியின் நிறுவன தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். தொடர்ந்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை கட்சி நிறுவன தலைவர் ராஜ்குமார் வழங்கினார்.
தமிழர் விடுதலை களம் கட்சி உறுப்பினர் சேர்க்கை
Published on

விளாத்திகுளம்:

விளாத்திகுளத்தில் தமிழர் விடுதலை களம் கட்சி சார்பில் சட்டம் மற்றும் அரசியல் பயிற்சியரங்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. கட்சியின் நிறுவன தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். வடக்கு மாவட்ட செயலாளர் காளிராஜ் முன்னிலை வகித்தார். விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் சரவணகுமார் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீரோடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விளாத்திகளும் பகுதி விவசாய பொதுமக்களுக்கு மழை நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை கட்சி நிறுவன தலைவர் ராஜ்குமார் வழங்கினார்.

இதில் மாநிலத் துணைத் தலைவர் சாமி, மாநில சட்ட ஆலோசகர் பிரபுஜீவன், வடக்கு மாவட்ட பொருளாளர் ஆறுமுகப்பெருமாள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com