பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த கூட்டம் - கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்பு

நாகை தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற ஓராண்டில் தொகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் நிறைவேற்றப்பட வேண்டியவைகளை உடனுக்குடன் தனியே பிரித்து கலெக்டரிடம் வழங்கியிருந்தார். 1232 மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.
கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Published on

நாகப்பட்டினம்:

நாகை தொகுதி எம்.எல்.ஏ.வாக முகமது ஷாநவாஸ் பொறுப்–பேற்றதில் இருந்து கடந்த மாதம் வரை ஓராண்டில் தொகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில், மாவட்ட நிர்வாகம் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய மனுக்களை உடனுக்குடன் தனியே பிரித்து கலெக்டரிடம் வழங்கியிருந்தார். அப்படி வழங்கப்பட்ட 1232 மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தாசில்தார், தனி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர், சுகாதாரத் துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com