எலி மருந்து சாப்பிட்ட மெக்கானிக் சாவு

சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் எலி மருந்து சாப்பிட்ட மெக்கானிக் பாலியானர்.இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
எலி மருந்து சாப்பிட்ட மெக்கானிக் சாவு
Published on

சேலம்:

சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 54). ஜேசிபி மெக்கானிக்கான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்ட குமார், மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமார், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com