ஏ.டி.எம். கார்டு விவரங்களை பகிர வேண்டாம்

ஏ.டி.எம். கார்டு விவரங்களை பகிர வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தினர்.
பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர் கிரைம் போலீசார்.
பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர் கிரைம் போலீசார்.
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்படி பயணிகள், பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் சைபர் கிரைம் போலீசார் இணையவழி மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சைபர் க்ரைம் போலீசார் சுதாகர் மற்றும் போலீசார் பொது மக்களிடம் விழிப் புணர்வு துண்டு பிரசுரங் களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், குழந்தைகள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணிக்க அறிவுறுத்தினர்.

இணையத்தின் வாயிலாகவோ செல்போன் வாயிலாகவோ உங்களது சுய விவரங்களை யாரேனும் கேட்டால் பகிர வேண்டாம், முகம் தெரியாத நபர்களை இணையத்தில் நண்பனாக்கிக் கொள்ள வேண்டாம்.

உங்களது ஏ.டி.எம் கார்டு, ஆதார் கார்ட், ஓ.டி.பி எண்களை யாரிடமும் பகிர வேண்டாம், வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி என்னை அழைத்து சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com