பாய் தடுக்கி கீழே விழுந்த கொத்தனார் பரிதாப சாவு

கன்னங்குறிச்சியில் பாய் தடுக்கி கீழே விழுந்த கொத்தனார் பரிதாப இறந்தார்.
பாய் தடுக்கி கீழே விழுந்த  கொத்தனார் பரிதாப சாவு
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் கன்னங்குறிச்சி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55), கொத்தனார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். வெங்கடேசன் நேற்று இரவு வீட்டில் பாய் போட்டு படுத்திருந்தார்.

அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் எழுந்து வெளியே வர முயன்றார். அப்போது பாய் தடுக்கி வெங்கடேசன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com