மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு உடனுக்குடன் சம்பளம் வழங்க வேண்டும்.100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் சம்பளத்தை உடனே வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஞானப்பிரகாசம், கரிகாலன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி செய்யும் பயனாளிகளுக்கு உடனுக்குடன் சம்பளம் வழங்க வேண்டும்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்த வேண்டும்.

வறுமையில் வாடும் பயனாளிகளுக்கு தீபாவளிக்கு முன்பு கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி செல்லப்பன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com