கயத்தாறு அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்யாண புரோக்கர் பலி

ராஜாராம் தனது உறவினர் வீடான கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ரெங்காழ்வார் என்பவரது வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் உறவினருக்கு சொந்தமான வடக்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள தோட்டத்துக்கு நேற்று மாலை சென்றுள்ளார்.
கயத்தாறு அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்யாண புரோக்கர் பலி
Published on

கயத்தாறு:

கோவை சிறுவாணி அருகே உள்ள பேரூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 53). திருமண புரோக்கர். இவர் தனது உறவினர் வீடான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ரெங்காழ்வார் என்பவரது வீட்டிற்கு வந்தார்.

இந்நிலையில் உறவினருக்கு சொந்தமான வடக்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள தோட்டத்துக்கு நேற்று மாலை சென்றுள்ளார். இன்று காலை உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது கிணற்றில் இறந்த நிலையில் ராஜாராம் மிதந்துள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கிணற்றில் தவறி விழுந்து ராஜாராம் பலியானது தெரியவந்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com