வாழப்பாடியில் திருமண ஆசைகாட்டி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் வாலிபர் கைது

சிறுமிக்கு திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்ற கிர்த்திக் (வயது 23) அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.பாலியல் தொந்தரவு செய்த அந்த வாலிபர் போக்சோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிர்த்திக்.
கிர்த்திக்.
Published on

வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகளான 16 வயது சிறுமி கடந்த மாத இறுதியில் வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுமிக்கு திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்ற ஆத்தூர் நாவலூர் பகுதியைச் சேர்ந்த கிர்த்திக் (வயது 23) என்றும் அவர் அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.இதனைடுத்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வாழப்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com