வங்கியில் ரூ.4 கோடி கொள்ளை வழக்கு: கைதான கொள்ளையன் வீட்டில் 16 கிலோ தங்கம் பறிமுதல்

3 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நெல்லை வந்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சோதனை நடந்த கொள்ளையன் வீடு
சோதனை நடந்த கொள்ளையன் வீடு
Published on

களக்காடு:

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்குட்பட்ட கே.சி. ரோடு பகுதியில் விவசாய கூட்டுறவு வங்கி உள்ளது.

இந்த வங்கியில் கடந்த 17-ந்தேதி மதியம் முகமூடி அணிந்து வந்த 4 பேர் கும்பல் அங்கிருந்த வங்கி ஊழியர்கள் 5 பேரை அரிவாள், துப்பாக்கியை காண்பித்து மிரட்டி சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தை அள்ளி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உல்லால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 8-க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம், கேரளம், மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சென்றது.

இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மநேரி கிராமத்தைச் சேர்ந்த முருகாண்டி (வயது 36), ஜோசுவா ஆகிய 2 பேரை களக்காட்டில் மங்களூரு போலீசார் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ தங்கம், ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், மும்பை பதிவு எண் கொண்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 துப்பாக்கி, 3 குண்டுகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இதில் தொடர்புடைய கண்ணன் மணி என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர்கள் 3 பேரும் கர்நாடகா சிறப்பு போலீஸ் படையினரிடம் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நெல்லை வந்தனர்.

அவர்கள் இரவோடு இரவாக முருகாண்டியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 16 கிலோ எடை கொண்ட வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை கைப்பற்றி உள்ளனர். இதுதொடர்பாக முருகாண்டியின் தந்தையிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com