வருசநாடு அருகே தொடர் கொலையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

வருசநாடு அருகில் உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது உறவினரை கொலைசெய்து விட்டு சிறைக்கு சென்றவர். பின்னர் விடுதலையாகி ஊருக்குள் சுற்றி வந்ததால் அவருக்கு யாரும் பெண் தரவில்லை. இதனால் சைக்கோ வாலிபர் போல பெண்களை கேலி செய்து வந்துள்ளார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

வருசநாடு:

தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் சொக்கர் (வயது 35). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது உறவினரை கொலைசெய்து விட்டு சிறைக்கு சென்றவர். பின்னர் விடுதலையாகி ஊருக்குள் சுற்றி வந்ததால் அவருக்கு யாரும் பெண் தரவில்லை. இதனால் சைக்கோ வாலிபர் போல பெண்களை கேலி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 2ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சமுத்திரம் (53) என்பவரை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்கொலை சம்பவங்களில் ஈடுபட்ட அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து சொக்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் சொக்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com