

தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள புதூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 46). இவரது மனைவி ஜெயந்தி. இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
வெங்கடாசலம் காலை நேரத்திலேயே மது அருந்துவது வழக்கமாம். நேற்று காலையும் இதேபோல குடிக்க பணம் கேட்டு வெங்கடாசலம் தகராறு செய்துள்ளார்.
ஆனால் பணம் இல்லை என்று ஜெயந்தி தர மறுத்துள்ளார். இந்நிலையில் கோபமாக அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்ட வெங்கடாசலம் அங்கிருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஜெயந்தி கொடுத்த புகாரின்பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.