

கம்பம்:
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியைச் சேர்ந்த பொன்ராம் மகன் மனோகரன் (வயது57). இவர் அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு கடந்த 2019ம் ஆண்டு ரூ.10 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.
கடனை திரும்ப கேட்டபோது பணம் தராமல் மகேந்திரன் வங்கிக் காசோலை கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தமனோகரன் உத்தமபாளையம் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி காசோலை மோசடி செய்த மகேந்திரனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.