தளவாய் பாளையம் அருகே புது ஆற்றில் ஆண் பிணம்

தளவாய் பாளையம் அருகே புது ஆற்றில் 35 மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆற்றில் மிதந்த உடலை கைபற்றிபிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
தளவாய் பாளையம் அருகே புது ஆற்றில் ஆண் பிணம்
Published on

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவல் சரகம், தளவாய் பாளையம் அருகே புது ஆற்றில் 35 மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் மிதந்த உடலை கைபற்றிபிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் முடி வெட்டி முகவரம் செய்திருந்த நிலையில் இருந்தார்.

இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் காணப்படவில்லை உடலில் காயம் எதுவும் இல்லாததால் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கி இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் இறநதவரின் உடல் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com