கடலூர் அருகே அழுகிய நிலையில் கிடந்த ஆண் பிணம்

மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
ஆண் பிணம்
ஆண் பிணம்
Published on

கடலூர்:

கடலூர் அருகே திருவந்திபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார் ? யாரேனும் கொலை செய்து இங்கே போட்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com