தென்பெண்ணை ஆற்றில் ஆண் சடலம்

அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் பாலம் கீழே ஆண் சடலம் மிதந்தது.சடலத்தின் முகங்கள் சிதைக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் சரியாக வயது கூட கணிக்க முடியாத நிலையில் கண்டெடு க்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் ஆண் சடலம்
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் நேற்று காலை சேலம் செல்லும் பாலம் கீழே ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஊத்தங்கரை காவல்துறையினர் தீயணைப்புத் துறையினரை வரவழைக்கப்பட்டு சடலத்தை மீட்டு பார்த்தபோது சடலம் ஆற்றில் அடித்து வரப்பட்டது தெரியவந்தது.

சடலத்தின் முகங்கள் சிதைக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் சரியாக வயது கூட கணிக்க முடியாத நிலையில் கண்டெடு க்கப்பட்டுள்ளது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் யார்? எந்த பகுதியைச் சார்ந்தவர்? இது கொலையா? தற்கொலையா? என போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் சடலம் மீதந்து வந்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com