மகாகவி பாரதி தேசிய பேரவை சார்பில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு

பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.மகாகவி பாரதி தேசிய பேரவை தஞ்சை மாவட்டத்தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் தலைமை வகித்தார்.
பாரதியார் சிலைக்கு மகாகவி பாரதி தேசிய பேரவை சார்பாக அதன் தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
பாரதியார் சிலைக்கு மகாகவி பாரதி தேசிய பேரவை சார்பாக அதன் தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
Published on

தஞ்சாவூர்:

பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் உள்ள பாரதியார் சிலைக்கு மகாகவி பாரதி தேசிய பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மகாகவி பாரதி தேசிய பேரவை தஞ்சை மாவட்டத்தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயல் தலைவர் மூவர் கோட்டை ஸ்ரீதர் மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் துணை த்தலைவர்கள் பூதலூர் மோகன்ராஜ், முனைவர் செந்தில்குமார், குருவி ரமேஷ்குமார், சாய்சரன், பாரத் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மா.சதானந்தம். பேராசிரியை சிவரஞ்சனி, பாரத் அலைகள் இணை ஆசிரியர் வே. தேவநேசன், பாரதி இயக்கத்தை சேர்ந்த மோகன்,கண்ணையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com