ரெகுநாதபுரம் உருத்திராபதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

திருவிளக்கு வழிபாடு புனித நீர் வழிபாடு விநாயகர் வேள்வி நடைபெற்றது. பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.
மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.
Published on

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள உருத்திரா பதீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முதல் நாள் மாலை திருவிளக்கு வழிபாடு புனித நீர் வழிபாடு விநாயகர் வேள்வி நடைபெற்றது.

2 வது நாள் கோ பூஜை, ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், முதல் கால வேள்வி வழிபாடு நடைபெற்றது 3வது நாள் 2 -ம் கால வேள்வியும் அதனைத் தொடர்ந்து

விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தீபாரதனை நடைபெற்றது விழாவில் ரெகுநாதபுரம் பொதுமக்கள் கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com