

மதுரை
மதுரை வடக்கு பெருமாள் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (40). இவர் தெப்பக்குளம் பங்கஜம் காலனியில் நகை தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்க மாநிலம் பர்கானா மாவட்டத்தை சேர்ந்த நஸ்ருல் ஹக்பைலான் (32) என்பவர் வேலை பார்த்தார்.
சம்பவத்தன்று சிவகுமார் 26 பவுன் நகையை நஸ்ருல் ஹக்பைலானிடம் கொடுத்ததாக தெரிகிறது. இதனை அவர் எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை காமராஜர் சாலை சீனிவாசபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 51). இவர் தெற்கு ஆவணி மூல வீதி மேட்டு கம்மாள தெருவில் நகை கடை நடத்தி வருகிறார்.
யாரோ சிலர் அந்த கடையில் இருந்த 2 பவுன் தங்க செயினை திருடிக்கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.