

மதுரை
மதுரை அங்கையற்கண்ணி நகரில் காருக்குள் வாலிபர் பிணம் கிடப்பதாக ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் காரில் இறந்துகிடந்தவர் டாக்ஸி டிரைவர் சுந்தர்(வயது35) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மாலினி உள்ளார். டாக்சி டிரைவர் சுந்தருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் மதுவில் விஷம்கலந்து குடித்து இறந்தாரா? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.