மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு

மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு நடத்தப்பட்டது. மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் தலைமை தாங்கினார்.
மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு
Published on

சோழவந்தான்

சோழவந்தான் பேரூராட்சிக்குட்ட வார்டுகளில் தீவிர தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் தலைமை தாங்கினார்.

செயல் அலுவலர் சுதர்சனன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் வரவேற்றார். மக்கும் பொருட்கள், மக்காத பொருட்களை பிரசார வாகனத்தில் கண்காட்சியாக வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

பெண்களிடம் இலவசமாக மஞ்சள் பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துணைத்தலைவர் லதா கண்ணன், வக்கீல் சத்தியபிரகாஷ், ஈஸ்வரி ஸ்டாலின், குருசாமி, முத்துலட்சுமி சதீஸ், செல்வராணி, நிஷாகவுதம், சமூக ஆர்வலர்கள் முனியாண்டி, மில்லர் இளமாறன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து வார்டு பகுதிகளில் இயற்கை வளம் காக்க மரக்கன்றுகள் நடப்பட்டன. தீவிர தூய்மை பணி பிரசாரத்தில் துப்புரவு பணியாளர்கள், பேரூராட்சி கணக்கர் கண்ணம்மா, சோனை, அசோக், மேஸ்திரி சுந்தரராஜன், பால்பாண்டி ஆகியோர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com