பாத்திமா கல்லூரியில் உலக தரத்தில் கட்டமைப்பு வசதிகள்

மதுரை மாவட்டம் அன்னை பாத்திமா கல்லூரியில் உலக தரத்தில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதிய வகுப்பறையில் கல்விக்குழுமத்தலைவர் எம்.எஸ்.ஷா மற்றும் மாணவ-மாணவிகள்.
புதிய வகுப்பறையில் கல்விக்குழுமத்தலைவர் எம்.எஸ்.ஷா மற்றும் மாணவ-மாணவிகள்.
Published on

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லூரி மற்றும் கேட்டரிங் கல்லூரிகள் உள்ளன. இதன் குழுமத்தலைவர் எம்.எஸ்.ஷா, பரினிக் சைன்ஸ் மாணவ&மாணவிகளுக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய புதியவகுப்பறையை தொடங்கி வைத்தார். 

அப்போது அவர் பேசியதாவது:-

எங்களது கல்லூரி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே பல்வேறு வளர்ச்சிகளை கொண்டு இமாலய வெற்றி பெற் றுள்ளது. அனைத்து தரப்பினரின் ஆதரவு பெற்ற கல்லூரியாக திகழ்ந்து வருகிறது.

இயற்கையான முறையில் காற்றோட்டம் மிகுந்த இடத்தில் அதிநவீன வசதிக ளுடன் கூடிய வகுப்பறைகள், மாணவ&மாணவிகள் தங்கும் விடுதிகள், தரமான உணவுகளுடன் கேண்டீன் வசதி என அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. 

மாணவர்கள் கல்வியில் தங்களை மேம்படுத்தி எதிர்கால வாழ்வை பிரகாசிக்க வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருகிறோம்.

ஸ்டார் ஓட்டலில் என்னென்ன வசதிகள் உள்ளதோ, அதுபோன்ற வசதிகளையும் கல்லூரியில் ஏற்படுத்தி வருகிறோம்.  இந்தியாவில் வேறு எந்த கல்லூரியிலும் இல்லாத கட்டமைப்பு இங்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com