சேடப்பட்டி அருகே தொழிலாளி மர்ம சாவு

சேடப்பட்டி அருகே தொழிலாளி மர்மமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொழிலாளி மர்ம சாவு
தொழிலாளி மர்ம சாவு
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் சேடப்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஓனான்பட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40). இவர் பரவை மார்க்கெட்டில் லோடுமேனாக பணியாற்றி வந்தார்.

இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. முருகேசுவரி என்ற மனைவியும், 12 வயதில் மகளும், 11 வயதில் மகனும் உள்ளனர்.

ராஜ்குமார் அடிக்கடி மது அருந்தி வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில்  நேற்று அவர் வீட்டில் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனல் வழியிலேயே ராஜ்குமார் இறந்தார்.

அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com