

வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சந்தை அருகே கடந்த திங்கட்கிழமை 80 வயது முதியவர் நடந்து வந்த போதுமயங்கி விழுந்தார். நீரோதான் கிராம நிர்வாக அதிகாரி சிவலிங்கம் அவரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு முதலு தவி சிகிச்சை செய்தபின் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரிய வில்லை. கட்டம் போட்ட டார்க் ப்ளூ கலர் சட்டையும், பொடி கட்டம் போட்ட ப்ளூ கலர் கைலியும் அணிந்திருந்தார். மொட்டை அடித்த தலையில் சிறிது முடி வளர்ந்து இருந்தது. இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சபாபதி சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.