குடிநீர்வடிகால்வாரிய ஊழியர் கைது

மதுபாட்டில்கள் கடத்திய குடிநீர்வடிகால்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார். மணியை போலீசார் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் கூடக்கோவில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடிநீர்வடிகால்வாரிய ஊழியர் கைது
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் கூடக்கோவில் பகுதியில் நேற்று போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். பாரபத்தியில் இருந்து கூடக்கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் 60 மதுபாட்டில்கள் இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தியபோது பாரபத்தியை சேர்ந்த மணி(52) என்பதும், குடிநீர்வடிகால் வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிவதும் தெரியவந்தது. கூடக்கோவில் பகுதியில் அந்த மதுபாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றபோது போலீசாரிடம் சிக்கினார்.

மணியை போலீசார் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் கூடக்கோவில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com