

மதுரை
மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 9 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதிலும் அந்தந்த பகுதிகளில் 1605 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு 57 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
மதுரை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக மதுரை மாநகரில் பாத்திமா கல்லூரி (மாநகராட்சி 1வது மண்டலம்), வக்போர்டு கல்லூரி (2-வது மண்டலம்), தமிழ்நாடு பாலிடெக்னிக் ஆண்கள் கல்லூரி (3-வது மண்டலம்), தமிழ்நாடு பாலிடெக்னிக் பெண்கள் கல்லூரி (4-வது மண்டலம்) ஆகிய பகுதிகளில் 4 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல மேலூர் நகராட்சிக்கு எஸ்.வி. சாலா மெட்ரிக்குலேசன் பள்ளி, திருமங்கலம் நகராட்சிக்கு பி.கே.என். பெண்கள் உயர் நிலைப்பள்ளி, உசிலம்பட்டி நகராட்சிக்கு நாடார் சரஸ்வதி உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் 3 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பரவை, அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான், ஏ.வெள் ளாளப்பட்டி ஆகிய 6 பேரூ ராட்சிகளுக்கு பரவை மங்கையர்கரசி கல்லூரியிலும், டி.கல்லுப்பட்டி, பேரையூர், எழுமலை ஆகிய 3 பேரூ ராட்சிகளுக்கு பேரையூர் அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியிலும் ஓட்டு எண்ணிக்கை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மதுரை மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 9 மையங்களிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் முக்கியமான பகுதிகள் அனைத்தும் கண்காணிப்பு காமிரா மூலம் தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளிநபர்கள் செல்லாத வகையில் போலீ சார் பேரிகார்டு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட அளவில் 1000 போலீசாரும், மாநகரில் 1500 போலீசாரும் பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தின் 9 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் நாளை காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 10 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி அளவில் நடக்கும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தலா 22 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. அவற்றில் 26 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். நகராட்சி அளவில் நடக்கும் வாக்கு எண்ணிக்கை மையங் களில் தலா 20 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. அவற்றில் 22 சுற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
இதேபோல பேரூராட்சி அளவில் வாக்கு எண் ணிக்கை நடக்கும் மையங் களில் 21 மேஜைகள் போடப்பட்டு, அவற்றில் 26 ரவுண்டு சுற்றுகள் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நடக்கும். மதுரை மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஒரு மேஜைக்கு தலா ஒரு மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் வீதம் 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வாக்குஎண்ணும் பணியில் ஈடுபடுகிறார்கள்.