கிராம சபை கூட்டம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின கிராம சபை கூட்டம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
கிராம சபை கூட்டம்
Published on

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான வருகிற 26-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த கூட்டங்களில் அந்தந்த ஊராட்சியில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். கிராம சபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com