வரதராஜ பெருமாள் கோவில் பாலாலயம்

மதுரை முள்ளிபள்ளத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம் நடந்தது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புணரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வரதராஜ பெருமாள் கோவில் பாலாலயம்
Published on

சோழவந்தான்

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இங்கு கும்பாபிஷேக புணரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக கோவில் முன்பு பாலாலய பூஜையை ஸ்ரீவத்சன் குழுவினர் நடத்தினர். நிர்வாக அதிகாரி இளமதி, சோழவந்தான் கோவில் சரக ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற பாலாலய விழாவில் கணக்கர் பூபதி, ஆலய பணியாளர் வசந்த், திருப்பணிக்குழு நிர்வாகிகள் தலைவர் கோபாலன் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com