வாலிபர் பலி

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
வாலிபர் பலி
வாலிபர் பலி
Published on

திருமங்கலம்

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி இவருடைய மகன் மனோஜ்குமார்(வயது 25). 

இவர் மதுரையில் உள்ள தனியார் வங்கியில் வேலைக்கு சேருவதற்காக திருமங்கலத்தில் உள்ள தனது சகோதரி திவ்யா வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

திருமங்கலம் அருகே உள்ள கட்ராம்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் நோக்கிச் சென்ற சிமெண்டு லாரி மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 திருமங்கலம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com