ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர். சரவணன் இல்ல திருமண விழா

ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர். சரவணன் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது. அனைவரும் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்த வேண்டும் என்று திருமண வீட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மணமக்கள் விஷ்ணுராம்- வைஷ்ணவி.
மணமக்கள் விஷ்ணுராம்- வைஷ்ணவி.
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர்.சரவணன் தம்பதியரின் மகன் எஸ்.வி.விஷ்ணு ராமிற்கும், மாரணி வாரி யேந்தல் டி. கண்ணன்-தீபா மகள் வைஷ்ணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த திருமண விழா சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் சி.பி.ஆர். அருவுகம் மகாலில் நாளை 25-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் நடக்கிறது. திருமண விழாவை தி.மு.க. மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும்-அமைச்சருமான பி. மூர்த்தி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.

வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆ.வெங்க டேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகிக்கிறார். வாடிப்பட்டி பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான மு.பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன், பசும்பொன் மாறன் ஆகியோர் வரவேற்கின்ற னர்.ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி. ராஜா, சோழவந் தான் ஒன்றிய கவுன்சிலர் பேரூர் செயலாளர் எஸ்.என். சத்யபிரகாஷ் ஆகியோர் நன்றி கூறுகின்றனர். இதில் உற்றார்-உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்த வேண்டும் என்று திருமண வீட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com