

மதுரை
புதூர் ராமலட்சுமி நகரை சேர்ந்த பாண்டி மகள் காதம்பிரியா (24). சம்பவத்தன்று காலை இவர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் நடந்து சென்றார். வணிக வளாகம் அருகே, வேகமாக வந்த பைக் மோதியது.
இதில் காதம்பிரியா படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த தேனி மாவட்டம், சிப்பலாக்கோட்டை, அம்பிகை கோவில் தெருவை சேர்ந்த மணிவண்ணன் (34) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊமச்சிகுளம், புது நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேர்ந்த ராஜாராம் மனைவி தனம் (80). இவர் வெளியூருக்கு செல்வதற்காக, குடிநீர் வடிகால் வாரிய காலனி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி தனத்தை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்த மதுரை இளம்பூர் இளங்கோ முருகன் ராம்பாபு (22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.