போலி வயர்களை விற்ற வியாபாரிகள் கைது

மதுரையில் போலி வயர்களை விற்ற வியாபாரிகள் கைது செய்யப்பட்டார். அலுவலக உபயோகத்துக்காக மதுரை கிளாஸ்கார தெருவில் உள்ள எலக்ட்ரிகல் கடையில் வாங்கியுள்ளார்.
போலி வயர்களை விற்ற வியாபாரிகள் கைது
Published on

மதுரை

விழுப்புரம் மாவட்டம், அவரப்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 33). மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் அலுவலக உபயோகத்துக்காக பிராண்டட் நிறுவனத்தின் வயர்களை மதுரை கிளாஸ்கார தெருவில் உள்ள எலக்ட்ரிகல் கடையில் வாங்கியுள்ளார். அந்த வயர்களை பரிசோ தித்தபோது அவை போலி என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று பணத்தை திருப்பித் தரும்படி கேட்டார்.அவர்கள் தர மறுத்து விட்டனர். இதுகுறித்து வினோத் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லோகேசுவரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தெற்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்த தால்பர்ட் (39), அவரது சகோதரர் தீக்சித் (21) ஆகிய 2 வியாபாரிகளை கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com