

மின்தடை
மதுரை அரசரடி துணைமின் நிலையத்தில் உள்ள கார்ப்பரேசன் 3வது பாயிண்ட் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை(8ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை புது ஜெயில் ரோடு, முரட்டன்பத்திரி, மில் காலனி, கரிமேடு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, சம்பந்தமூர்த்தி தெரு, குட்செட் தெரு முதல் ரெயில்வே டாக்சி ஸ்டாண்டு வரை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இதேபோன்று பசுமலை துணை மின்நிலையத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பீடர் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளன. இதன் காரணமாக கூடல்மலைத்தெரு, ஜி.எஸ்.டி.ரோடு, சன்னதி தெரு, பாம்பன் நகர், கிரீன் நகர், திருமலையூர் ஆகிய பகுதிகளில் நாளைகாலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மதுரை அரசரடி மேற்கு செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.