நாளை மின்தடை

மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் ஏற்படுகிறது.
மின்தடை
மின்தடை
Published on

மதுரை

சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமயநல்லூர் துைண மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (10-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் ஏற்படுகிறது. எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் சரவணா நகர், பாலாஜி பவர் ஹவுஸ், மகாகணபதி நகர், அன்னை மீனாட்சி நகர், எஸ்.எஸ்.மகால், வித்ய வாகினி அபார்ட்மெண்ட், ஆகாஷ் கிளப் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு திருநகர் அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆனையூர் துணை மின்நிலையங்களில் உள்ள சோலையழகுபுரம் பகுதியில் உயர் அழுத்த மின் பாதைகளின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (10-ந் தேதி) காலை மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் சங்கீத்நகர், சஞ்சீவி நகர், ஆனையூர் மெயின் ரோட, செல்லையா நகர் 1-வது தெரு முதல் 4-வது தெரு வரை, குட்செட்தெரு, அன்புநகர், அசோக் நகர், அப்பாத்துரை நகர் 1-வது தெரு, மல்லிகை நகர், ஆபீசர் டவுன், சிலையனேரி, வைகை அப்பார்ட்மெண்ட், பிரசன்னா காலனி, கூடல்புதூர், கருப்பசாமி நகர், இந்திரா நகர், ஜானகி நகர் 2-வது தெரு உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதுரை பெருநகர் மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவில் துணை மின்நிலையம் பகுதியில் மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (10-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் கீழமாசி வீதி, கீழ ஆவணி மூல வீதி, தாசில்தார் பள்ளி வாசல் தெரு, தளவாய் தெரு, வெங்கலக்கடைத்தெரு, சாமி சன்னதி, கீழவடம்போக்கித்தெரு, கீழ பெருமாள் மேஸ்திரி வீதி, கொத்தவால் சாவடி, ஜடாமுனீஸ்வரர் கோவில் தெரு, ஆதிமூலம் பிள்ளை சந்து உள்ளிட்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com