திருமங்கலம் தாலுகாவில் நிரம்பிய கண்மாய்கள்

திருமங்கலம் தாலுகாவில் கண்மாய்கள் நிரம்பின. தொடர் மழையால் திருமங்கலம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் மழையால் நிரம்பி மறுகால் பாயும் பொன்னமங்கலம் கண்மாய்.
தொடர் மழையால் நிரம்பி மறுகால் பாயும் பொன்னமங்கலம் கண்மாய்.
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வந்தது. இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் மழை மற்றும் வைகையில் திறந்துவிடப்பட்ட தண்ணீ ரால் இந்ததாலுகாவில் அமைந்துள்ள பொன்னமங்கலம் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.

பொன்னமங்கலம் கிராமத்திற்கு அருகேயுள்ள ஜோதிமாணிக்கம் கண்மாய் நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக கடந்த ஒருவாரகாலமாக பொன்னமங்கலம் கண்மாய்க்கு வந்து கொண்டிருந்தது.

இதனால் நேற்று முன்தினம் பொன்ன மங்கலம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. தொடர்ந்து கண்மாய் உபரிநீர் கண்மாயின் கிழக்குப்பகுதி வழியாக மறுகால் பாய்ந்து வெளியேறி அருகேயுள்ள ஜோசியர் ஆலங்குளம் கண்மாய்க்கு செல்லத் தொடங்கியுள்ளது.

இதே போல் பொன்ன மங்கலம் கிராமத்தின் அருகேயுள்ள மேலேந்தல் கண்மாயும் நிரம்பி வழிகிறது. இந்த கண்மாய்க்கு பொன்னமங்கலம் கண்மாயின் மேற்குபகு தியிலுள்ள மறுகால் மூலமாக வெளியேறும் நீர் வருவதால் மேலேந்தல் கண்மாயும் நேற்று நிரம்பியது. இந்த கண்மாயின் உபரிநீர் மறுகால் வழியாக உரப்பனூர் கண்மாக்கு செல்கிறது. இது தவிர பொன்னமங்கலத்தினை அடுத்துள்ள திருமங்கலம் தாலுகாவின் கடைசி எல்லை கிராமமான வாகைகுளம் கிராமத்தில் உள்ள வாகைகுளம் கண்மாயும் நிரம்பியுள்ளது. தொடர் மழையால் திருமங்கலம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com