திருமங்கலம்: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி சாவு

திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.நேற்று இரவு இவர் மின்விசிறி போடுவதற்காக வயரை சொருகியுள்ளார்.
திருமங்கலம்: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி சாவு
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் கூடக்கோவில் போலீஸ் சரகம் சின்னஉலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகள் கார்த்திகைசெல்வி(வயது 12). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார்.

காளிமுத்து சின்ன உலகாணி கிரா மத்தில் தோட்டத்தில் புதிதாக வீடுகட்டி உள்ளார். கட்டிட பணி முழுமை பெறாத நிலையில் அந்த வீட்டில் நேற்று இரவு கார்த்திகை செல்வி மின்விசிறி போடுவதற்காக வயரை சொருகியுள்ளார்.

அப்ேபாது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகை செல்வி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

இதையடுத்து மாணவி கார்த்திகை செல்வியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்தில் வைக்கப்பட்டது. இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com