மேலூர் அருகே கலையரங்கம்

மேலூர் அருகே புதிய கலையரங்கத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.மேலூர் ஊராட்சி ஒன்றியம், சருகு வலையபட்டி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
மேலூர் அருகே கலையரங்கம்
Published on

மேலூர்

மேலூர் ஊராட்சி ஒன்றியம், சருகு வலையபட்டி ஊராட்சியில் உள்ள லட்சுமிபுரத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டப்பட்டது.

இதை மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜேந்திரன், சருகு வலையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருந்தேவி ராமநாதன், கூட்டுறவு சங்கத்தலைவர் செல்வராஜ், கிளைச்செயலாளர் ராமநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபாலன், பாலசந்தர், மேலூர் நகர்மன்ற உறுப்பினர் திவாகர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சருகுவலையபட்டி முருகேசன், கிடாரிபட்டி சுரேஷ், மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com