காதல் மனைவியை கொலை செய்த கணவர் பரபரப்பு வாக்குமூலம்

காதல் மனைவியை கொலை செய்த கணவர் பரபரப்பு வாக்குமூலம் இது பற்றிய புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காதல் மனைவியை கொலை செய்த கணவர் பரபரப்பு வாக்குமூலம்
Published on

மதுரை

மதுரை தெற்கு வெளி வீதி, சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மகள் வர்ஷா (வயது19). இவர் நேற்று மதியம் சப்பாணி கோவில் தெருவில் பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் வர்ஷாவுடன் தகராறு செய்து அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார்.

இதில் உயிருக்கு போராடிய வர்ஷாவை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது பற்றிய புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் வர்ஷாவை கத்தியால் குத்திக்கொன்றது அவரது கணவர் பழனி (வயது26) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பழனி போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதா வது:-

நானும், வர்ஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் என்னை பிரிந்து வர்ஷா, தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அவரை குடும்பம் நடத்த வரும்படி பலமுறை அழைத்தும் வர மறுத்துவிட்டார்.

இதில் ஏற்பட்ட தகராறில் வர்ஷாவை தாக்கினேன். இதுபற்றி வர்ஷா ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. வர்ஷா என்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்து விட்டதுடன் போலீசிலும் என்னை பற்றி புகார் செய்ததால் அவர் மீது எனக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இத னால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com