ஆர்ப்பாட்டம் நடத்திய சகோதரிகள் கைது

மதுரை அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய சகோதரிகள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசுக்கு எதிராக எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம் நடத்திய சகோதரிகள் கைது
Published on

மதுரை

மதுரை காந்திபுரம் பகுதியில் உள்ள வீட்டில் சகோதரிகள் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு மத்திய அரசுக்கு எதிராக எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் 2 பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள் காந்திபுரத்தைச் சேர்ந்த குணாஜோதிபாசு மனைவி நந்தினி (29), ஆனந்தன் மகள் நிரஞ்சனா (24) என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com