மனைவி மீதான கோபத்தில் மகனை வீட்டில் அடைத்து சி்த்ரவதை செய்த தந்தை

மனைவி மீதான கோபத்தில் மகனை வீட்டில் அடைத்து சி்த்ரவதை செய்த தந்தை போலீசார் தேடி வருகின்றனர். தந்தை விளக்கால் பெற்ற மகனையே குத்தியுள்ளார். வலியால் துடித்த சிறுவன் கதறி அழுதுள்ளான்.
மனைவி மீதான கோபத்தில் மகனை வீட்டில் அடைத்து சி்த்ரவதை செய்த தந்தை
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே உள்ளது சின்னகற்பூரம்பட்டியை சேர்ந்தவர் அறிவாணன் (வயது32). இவரது மனைவி ரோஜா (29) இவர்களுக்கு ஜீவா(8) என்ற மகனும், நிலா என்ற மகளும் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் ரோஜா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவியின் மீது ஆத்திரத்தில் இருந்த அறிவாணன் சம்பவத்தன்று தனது மகன் ஜீவாவை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு விளக்கால் பெற்ற மகனையே குத்தியுள்ளார். வலியால் துடித்த சிறுவன் கதறி அழுதுள்ளான்.

இந்த நிலையில் மாயமான மகனை பல்வேறு இடங்களில் ேதடி பார்த்து உள்ளார். அப்போது ரோஜாவின் உறவினரான இன்பவள்ளி என்பவர், கணவர் வீட்டிலிருந்த மகனின் சத்தம் கேட்டதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து ரோஜா கணவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது சிறுவன் ஜீவா காயங்களுடன் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அவரது தாயார் உடனடியாக மகனை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கமலமுத்து, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் வழக்குப்பதிவு செய்து அறிவாணனை தேடி வருகின்றனர். மனைவி மீது உள்ள கோபத்தில் பெற்ற மகனை தந்தை சித்ரவதை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com