ஆயுதங்களுடன் பதுங்கியவர் கைது

ஆயுதங்களுடன் பதுங்கியவர் கைது செய்யப்பட்டனர். அவரிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆயுதங்களுடன் பதுங்கியவர் கைது
Published on

மதுரை

புதூர் போலீசார் வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள புதர் அருகே வாலிபர் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் மேலமடை, ஆசாரி தெருவை சேர்ந்த கணேசன் மகன் பாலகுமார் என்ற தவளை பாலா (23) என்பது தெரிய வந்தது. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன்விரோதம் உள்ளது.

சம்பந்தப்பட்ட நபரை கொலை செய்வதற்காக, தவளை பாலா, அரிவாளுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. அவரை புதூர் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com