குடிபோதையில் ரகளை செய்த கும்பல்

கோவில் விழா ஊர்வலத்தில் புகுந்து ரகளை செய்த கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
அரிவாளை காட்டி மிரட்டல்
அரிவாளை காட்டி மிரட்டல்
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள டி. கல்லுப்பட்டியில் உள்ள புது மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. விழாவில் நேற்று பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கடவுள் வேடம் அணிந்தவர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இதனை காண வழிநெடுகிலும் பொது மக்கள் திரண்டு இருந்தனர்.

அப்போது திடீரென ஊர்வலத்தில் சலசலப்பு ஏற்பட்டது. குடிபோதையில் ஊர்வலத்தில் புகுந்த 20 பேர் கொண்ட கும்பல் திடீரென மோதிக்கொண்டனர். 

இரு தரப்பாக பிரிந்த அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது ஒரு வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டினார். இதனால் அங்கு கூடி இருந்த பொதுமக்கள் பீதி அடைந்து ஓடினர்.

போதையில் இருந்த சமூகவிரோதிகள் ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்களை கீழே தள்ளியும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியும் ரகளையில் ஈடுபட்டனர்.

சமூக விரோதிகள் நடந்துகொண்ட காட்டு மிராண்டித்தனமான இந்த செயல் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் தற்போது வரை இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com