தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும்

அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும். ஜனாதிபதிக்கு அ.தி.ம.மு.க. கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும்
Published on

மதுரை

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் கவர்னர் ஆர். என். ரவி சமீப காலமாக தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழக சட்டமன்றத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையிலும், தனக்கு வழங்க ப்பட்டுள்ள அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கிலும் அவர் நடந்து வருகிறார்.

தேசிய கீதம் பாடப்படு வதற்கு முன்பு அவையில் இருந்து வெளியேறி அவை மரபையும் மீறியுள்ளார்.மேலும் அதிக அதிகாரம் படைத்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும், அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு பிரிவினை வாதத்தை பேசி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறார்.

எனவே தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் கவர்னர் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com