ஸ்ரீகாமாட்சி குரூப்ஸ்- எஸ்.பி.எல். குரூப்ஸ் இல்ல திருமண விழா

மதுரை செக்கானூரணியில் ஸ்ரீகாமாட்சி குரூப்ஸ்- எஸ்.பி.எல். குரூப்ஸ் இல்ல திருமண விழா நடந்தது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
ஸ்ரீகாமாட்சி குரூப்ஸ்- எஸ்.பி.எல். குரூப்ஸ் இல்ல திருமண விழா நடந்தது
ஸ்ரீகாமாட்சி குரூப்ஸ்- எஸ்.பி.எல். குரூப்ஸ் இல்ல திருமண விழா நடந்தது
Published on

மதுரை

செக்கானூரணி ஸ்ரீ காமாட்சி எஸ்.பி.எல். குரூப்ஸ் இல்ல திருமண விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் செக்கானூரணி ஸ்ரீ காமாட்சி குரூப்ஸ், மற்றும் எஸ்.பி.எல்.குரூப்ஸ் உரிமையாளர்கள் ஆர்.நாகேந்திரன் என்.பிரபா ஆகியோரின் மகன் முகேஷ்ராஜூவிற்கும் மதுரை பை-பாஸ் துரைச் சாமி நகரைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாண்டியன்- பிரேமலதா மகள் யாமினி ஆகியோரது திருமணம் நாகமலை புதுக் கோட்டை நான்கு வழிச் சாலை அருகே உள்ள தனி யார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த திருமணத்தில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், தொழிலதி பர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள், உறவி னர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண விழாவிற்கான ஏற் பாடுகளை செக்கானூரணி ஸ்ரீகாமாட்சி குரூப்ஸ் மற்றும் எஸ்.பி.எல்.குரூப்ஸ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

முன்னதாக திருமணத்தையொட்டி ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறு சுவை உணவு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com