மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.கூடுதல் கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார்.
மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு மருத்துவ முகாம்
Published on

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. கூடுதல் கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மகளிர் திட்ட நல அலுவலர் காளிதாஸ் முன்னிலை வகித்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார். உசிலம்பட்டி கோட்டாட்சியர் சங்கரலிங்கம், வட்டாட்சியர் கருப்பையா, யூனியன் தலைவர் ரஞ்சனி, நகர்மன்றத் தலைவர் சகுந்தலா, ஆணையாளர்கள் பாண்டி, கண்ணன், நகராட்சி ஆணையாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com