ராணுவ வீரர் மனைவியிடம் 4 பவுன் நகை பறிப்பு

மதுரை அருகே பேரையூரில் ராணுவ வீரர் மனைவியிடம் 4 பவுன் நகை பறிக்கப்பட்டது. வீடு புகுந்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை கைது செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணுவ வீரர் மனைவியிடம் 4 பவுன் நகை பறிப்பு
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூரை சேர்ந்தவர் ராஜா, ராணுவ வீரர். இவரது மனைவி நந்தினி(வயது30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று இரவு காற்றுக்காக நந்தினி வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியதாக தெரிகிறது. இதை நோட்டமிட்ட மர்ம நபர் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்குள் நைசாக புகுந்து தூங்கிக் கொண்டிருந்த நந்தினி கழுத்தில் கிடந்த நகையை பறித்தான்.

அப்போது திடுக்கிட்டு எழுந்த நந்தினி, நகையை இறுகப்பிடித்துக்கொண்டார். ஆனாலும் திருடன் கழுத்தில் இருந்த 4½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான். இதுகுறித்து நந்தினி பேரையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

பேரையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நகை, பணம் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com