சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சோழவந்தான் சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Published on

சோழவந்தான்

சோழவந்தான் வாடிப்பட்டி ரோடு நகரி சாலை பிரிவில் உள்ள ராகு கேது சமேத சித்தி விநாயகர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேம் நடைபெற்றது. முரளி கிருஷ்ணா அய்யங்கார் தலைமையில் 2 நாள் யாக பூஜை நடைபெற்றது. காலை 9 மணி அளவில் குடங்களை எடுத்து வந்து மூலவர் கோபுரத்தின் கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் விநாயகர் உள்பட பரிகார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது

இவ்விழாவில் சோழ வந்தான் ஜெனகை மாரி யம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல், லட்சுமி, அருணாச்சலம், அருணா, அருணாசலம், குருசாமி, சொக்கலிங்கம், சுற்றுலாத் துறை அலுவலர் பால முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர் சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com