காவலாளி தற்கொலை

மதுரை அருகே காவலாளி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலாளி தற்கொலை
Published on

மதுரை

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ண பாண்டியன் (வயது63). இவர் புது ராம்நாடு ரோட்டில் உள்ள வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென்று வாத நோய் வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சண்முகவள்ளி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபாண்டியனின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com